தமிழக செய்திகள்

உலக மகளிர் தின விழா

செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரியில் உலக மகளிர் தின விழா நடந்தது.

மன்னார்குடி:

மன்னார்குடியை அடுத்த சுந்தரக்கோட்டையில் உள்ள செங்கமலத் தாயார் மகளிர் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி தலைவர் வி.திவாகரன் தலைமை தாங்கினார். முதல்வர் எஸ்.அமுதா முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் ஜெயந்தி வரவேற்றார். நிகழ்ச்சியில் கல்லூரியின் அறிவியல் ஆலோசகர் தியாகேசன் கலந்து கொண்டு பேசினார். கல்லூரி துணை முதல்வர் காயத்ரிபாய் உமாமகேஸ்வரி அனைத்து துறை தலைவர்கள் பேராசிரியர்கள், மற்றும் 3000-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் தமிழ் துறை தலைவர் ஜெயந்தி, நடுவராக பங்கேற்ற பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது குடும்பமா, சமுதாயமா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.குடும்பமே என்ற தலைப்பில் மாணவிகள் சுபாஷினி, வெங்கடேஸ்வரி, காயத்ரி ஆகியோரும் சமுதாயமே என்ற தலைப்பில் மாணவிகள் திவ்யா, லாவண்யா, வர்ஷினி ஆகிய மாணவிகளும் கலந்து கொண்டு பேசினர்.தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முடிவில் தமிழ்த்துறை பேராசிரியர் கவிதா நன்றி கூறினார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு