சென்னை,
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்து அது தொடர்பாகவும் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
அதில் தமிழக பள்ளிகளில் மின்சாரம், குடிநீர், கழிவறை வசதிகளை பொறுத்தவரையில், 100 சதவீதம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் 76 சதவீத பள்ளிகளில் கம்ப்யூட்டர் வசதி உள்ளதாகவும், அதில் 32 சதவீத பள்ளிகளில் மட்டும் தான் இணையதள வசதி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.