தமிழக செய்திகள்

மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் நடத்த ஆயத்த பணி தொடக்கம் மாநில தேர்தல் ஆணையர் பேட்டி

முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது என்றும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையர் கூறினார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை கோயம்பேடு மாநில தேர்தல் ஆணையத்தில் அமைக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேற்று நடந்த வாக்குப்பதிவை மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த தேர்தலில் பறக்கும் படையினர் மூலம் இதுவரை 97 லட்சத்து 98 ஆயிரத்து 95 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர புடவைகள், துண்டுகள், மின்விசிறிகள், பித்தளை விளக்குகள், குங்குமச்சிமிழ்கள் போன்ற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அமைதியாக நடந்தது

அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இன்றி தேர்தல் அமைதியாக நடந்தது. தேர்தல் ஆணையத்துக்கு வந்த புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கான தேர்தலை நடத்த பூர்வாங்க பணிகளை தொடங்கி உள்ளோம். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்யும் பணி 17-ந் தேதிக்கு பின்னர் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது