தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கான நேர்காணலை ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. இளைஞர் அணி செயலாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தினத்தந்தி

ஆந்திராவில் அரசு பணியாளர் தேர்வில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், முறைகேடுகளை தடுக்கவும் குரூப்-1 பணிகள் உள்ளிட்ட அனைத்து அரசு பணிகளுக்கும் நடத்தப்பட்டு வந்த நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க சிறப்பான முடிவாகும். தமிழ்நாட்டிலும் அரசு பணிகளுக்கான நேர்காணலில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், தமிழகத்திலும் அனைத்து நிலை அரசு பணிகளுக்கும் நேர்காணலை ரத்து செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.

எழுத்து தேர்வுகளின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் அனைத்து பணிகளுக்கும் தகுதியானவர்களை தேர்வு செய்வதுதான் சரியாக இருக்கும். வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும்.

முறைகேடுகளை தடுக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்