பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது76). இவரது மகன் அன்பு (55). இவர்களுக்கு பொம்மிடி அருகே பூ மரத்தூரில் விவசாய நிலம் உள்ளது. இதை அரூர் அருகே உள்ள கெளாப்பறையை சேர்ந்த சென்னப்பன் (47) என்பவரிடம், ரூ.85 லட்சத்திற்கு விற்பதாக ஒப்பந்தம் போட்டு நிலத்தை சீர் செய்தனர். அதற்கு முன்பணமாக சென்னப்பனுக்கு ரூ.10 லட்சம் அன்பு கொடுத்துள்ளார். ஆனால் நிலம் சரி செய்த பிறகு முழுவதுமாக அளந்து பார்த்தபோது 10 ஏக்கர் அதிகமாக இருந்தது. இதனை சீர் செய்ய ரூ.25 லட்ச செலவாகும் என்று சென்னப்பன் கூறியுள்ளார். அந்த பணத்தை கொடுப்பதாக ஒப்புக்கொண்டு பின்பு அதனை கொடுக்கவில்லை. இதனால் வேலை முடிந்து பொக்லைன் எந்திரத்தை ஆபரேட்டர் எடுத்து வந்த போது கிருஷ்ணன், அன்பு ஆகியோர் துப்பாக்கியை காட்டி மிரட்டி வாகனத்தை எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் தந்தை-மகன் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பொக்லைன் எந்திரங்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா உள்ளிட்ட போலீசார் மீட்டனர்.