தமிழக செய்திகள்

திமுகவில் உட்கட்சி தேர்தல் வருகிற 21ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு

திமுகவில் உட்கட்சி தேர்தல் வருகிற 21ஆம் தேதி முதல் நடத்தப்படும் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

திமுக., உட்கட்சி தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 15 வது உட்கட்சி தேர்தல் வரும் பிப்.,21 ம் தேதி முதல் நடத்தப்படும் என திமுக தலைமை இன்று அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக திமுக கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும். அதைத் தொடர்ந்து ஒன்றிய, நகர, செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும்.

அதன் பிறகு மாவட்ட கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர் தேர்தல் நடைபெற்று முடிந்ததும், புதிய பொதுக்குழு கூட்டப்பட்டு தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி