கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

வருமானவரித்துறைக்கு வரும் 7-ந்தேதி முதல் புதிய இணையதளம் அறிமுகம்

வருமானவரித்துறை இணையதளம் நாளை முதல் 6-ந் தேதி வரை செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

வருமானவரி கணக்கை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்வதற்கு www.incometax.gov.in என்ற புதிய இணையதளத்தை வரும் 7-ந் தேதி முதல் வருமானவரித் துறை அறிமுகப்படுத்த இருக்கிறது.

வருமான வரி செலுத்துவோருக்கு எளிமையாகவும், உடனடியாக ரீபண்டு வழங்குவதற்கு ஏதுவாகவும் இந்த புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து கலந்துரையாடல்கள், பதிவேற்றம், நிலுவையில் உள்ள செயல்கள் அனைத்தும், ஒரே பக்கத்தில் தெரியும்படி இந்த இணையதளம் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய இணையதள பக்கம் அறிமுகம் மற்றும் பழைய இணைய பக்கத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் புதிய பக்கத்துக்கு மாற்றும் பணிகள் நடைபெற இருக்கின்றன. அதன் காரணமாக, பழைய இணையதள பக்கமான www.incometaxindiaefiling.gov.in நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 6-ந் தேதி வரை செயல்படாது. எனவே கணக்கு தாக்கல்செய்ய விரும்புவோர், இன்று (திங்கட்கிழமை) அல்லது வருகிற 7-ந் தேதிக்குப் பின்னர் தாக்கல் செய்யலாம் என்று வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்