தமிழக செய்திகள்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை ஆவணங்கள் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவிடம் ஒப்படைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை ஆவணங்கள் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா உள்பட ஏராளமானோர் விசாரிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 316 பேரின் வாக்குமூலங்கள் மற்றும் இதுவரை நடத்திய விசாரணைக்கான ஆவணங்கள் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை தனிப்படை போலீசார் தாக்கல் செய்தனர். 1500 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் தனிப்படை போலீசார் சமர்ப்பித்தனர்.

316 பேரிடம் சேகரிக்கப்பட்ட வாக்குமூலங்கள், ஆவணங்களை 13-ம் தேதி சிபிசிஐடியிடம் வழங்கவுள்ளதாக தகவல்

இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை ஆவணங்கள் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதால் விரைவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 316 பேரிடம் சேகரிக்கப்பட்ட வாக்குமூலங்கள், ஆவணங்களை 13-ம் தேதி சிபிசிஐடியிடம் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்