தமிழக செய்திகள்

முதலீட்டாளர்கள் மாநாடு: 21 புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, நுங்கம்பாக்கத்தில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்தார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை, நுங்கம்பாக்கத்தில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்தார். இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், புதிய தொழில் நிறுவனங்கள் உடன் தமிழக அரசு 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளது.

தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளத் தொழில் நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்லாமல் நிறுவனங்களுடன் கலந்துரையாடி புதிய முயற்சிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை, மதுரை மாவட்டங்களில் உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் விரைவில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்த மாநாட்டில் 60 ஒப்பந்தகள் கையெழுத்தாக உள்ளதாகவும், 70 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் கிடைக்கும் என்றும் தொழில் துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் 21 புதிய தொழில் திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதுதவிர, பணிகள் நிறைவடைந்துள்ள 12 திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். 

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்