தமிழக செய்திகள்

காஞ்சீபுரத்தில் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள வீரர்- வீராங்கனைகளுக்கு அழைப்பு

காஞ்சீபுரத்தில் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள வீரர்-வீராங்கனைகளுக்கு கலெக்டர் கலைச்செல்வி மோகன் அழைப்பு விடுத்துள்ளார்.

தினத்தந்தி

தேசிய விளையாட்டு தினம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக, ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி தேசிய விளையாட்டு தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் 29-ந்தேதி காஞ்சீபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

இது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்விமோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஹாக்கி போட்டியும், 100 மீட்டர் ஓட்ட பந்தயமும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கைபந்து போட்டியும், 100 மீட்டர் ஓட்ட பந்தயமும்,

பல்வேறு போட்டிகள்

பொது பிரிவுக்கு 45 வயது உள்ளவர்களுக்கு 1 கி.மீ நடை போட்டி, 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், செஸ் மற்றும் கேரம் போட்டிகளில் நடக்கிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொள்ளலாம்.

இந்த போட்டிகள் காலை 9 மணிக்கு நடைபெறும். மேலும் விவரம் பெற மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் 7401703481 கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரியில் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் போட்டியில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்