தமிழக செய்திகள்

போலி கையெழுத்திட்டு முறைகேடு - தலைமை காவலர் பணியிடை நீக்கம்

புகார் மனு ஏற்பு ரசீதுகளில் போலி கையெழுத்திட்டு முறைகேட்டில் ஈடுபட்ட தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தினத்தந்தி

திருச்சி,

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில், புகார் மனு ஏற்பு ரசீதுகளில் போலி கையெழுத்திட்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக, தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த செல்வராஜ் என்பவர், பொதுமக்களிடம் புகாரை பெற்றுக் கொண்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல், தன்னிச்சையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், மனு ஏற்பு ரசீதுகளில் உதவி ஆய்வாளர்களின் கையெழுத்திட்டு, முறைகேட்டில் ஈடுபட்டதாக, குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், செல்வராஜை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு