தமிழக செய்திகள்

இரும்புதலை அரசு கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும்

விற்பனை செய்ய நெல்லுடன் காத்துக்கிடப்பதால் இரும்புதலை அரசு கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தினத்தந்தி

மெலட்டூர்:

குறுவை அறுவடை பணி

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா இரும்புதலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறுவை சாகுபடி ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது.

முன்பருவத்தில் நடவு செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள் அறுவடை செய்யும் பணி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

நெல்லுடன் காத்துக்கிடக்கின்றனர்

அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்ய விவசாயிகள் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வருகின்றனர். ஆனால் இரும்புதலை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை.

இதனால் அரசு கொள்முதல் நிலையம் முன்பு நெல்லை கொட்டி வைத்து விற்பனை செய்ய முடியாமல் கடந்த ஒரு வாரமாக விவசாயிகள் காத்து கிடக்கின்றனர்.

கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும்

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையில் நெல் நனையாமல் இருக்க விவசாயிகள் தினமும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே இரும்புதலை கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறந்து நெல்லை கொள்முதல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்