தமிழக செய்திகள்

பாஜகவில் இணைகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர்? - வெளியான பரபரப்பு தகவல்

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தினத்தந்தி

சென்னை,

2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராகவும், அதைத் தெடர்ந்து சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் இருந்தவர் தேப்பு வெங்கடாசலம். 2016ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.

2021ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பும் வழங்கப்படவில்லை. இதனால், பெருந்துறை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். ஆனால், திமுக கரை வேட்டியை கட்டாமலும், தனது காரில் திமுக கொடியை கட்டாமலும் இருந்தது விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திமுகவில் இருந்து விலகி பாஜகவில் தோப்பு வெங்கடாசலம் இணையப் போவதாக தகவல் பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தோப்பு வெங்கடாசலம், தற்போது வரை திமுகவில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை