தமிழக செய்திகள்

“இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா?” - கனிமொழியை இந்தியரா என்று கேட்ட விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி

இந்தி தெரியாது என்று சொன்னதால் கனிமொழி எம்.பி.யிடம், ‘நீங்கள் இந்தியரா?’ என்று மத்திய பாதுகாப்பு படை பெண் அதிகாரி கேள்வி எழுப்பியதற்கு மு.க.ஸ்டாலின் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர், கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து விரைந்து மீண்டு முழு உடல்நலன் பெற்றிட விழைகிறேன் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டார்.

சென்னை விமானநிலையத்தில் இந்தி தெரியாது என்று சொன்னதால் கனிமொழி எம்.பி.யிடம், நீங்கள் இந்தியரா? என்று மத்திய பாதுகாப்பு படை பெண் அதிகாரி கேள்வி எழுப்பியதற்கு மு.க.ஸ்டாலின் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்தி தெரியாது என்று சொன்னதால், நீங்கள் இந்தியரா? என்று விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கனிமொழி எம்.பி.யை பார்த்துக் கேட்டுள்ளார். இந்தி தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா?, இந்தியாவா?. பன்முகத் தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே, அதில் புதையுண்டு போவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்