தமிழக செய்திகள்

எரிபொருள் விலை உயர்வு தான் மோடி அரசின் பொருளாதார திறமையா? ப.சிதம்பரம் விமர்சனம்

தமிழக காங்கிரஸ் மூத்த தலைவரான முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நேற்று வெளியிட்ட ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

தினத்தந்தி

பணவீக்கம் அதாவது விலை உயர்வு எவ்வளவு தெரியுமா? மொத்த விலை உயர்வு 12.94 சதவீதம். சில்லறை விலை உயர்வு 6.3 சதவீதம். என்ன காரணம் தெரியுமா? எரிபொருள் (பெட்ரோல், டீசல்) மற்றும் மின்சாரம் ஆகிய விலைகள் 37.61 சதவீதம் உயர்ந்துள்ளன.

உணவுப் பொருட்கள் விலை உயர்வு 6.3 சதவீதம். பருப்பு வகைகள் விலை உயர்வு 9.39 சதவீதம். சமையல் எண்ணெய் விலை உயர்வு 30 சதவீதம். பிரதமர் மோடியின் அரசு எவ்வளவு திறமையாக பொருளாதாரத்தை வழி நடத்துகிறது

என்று மெச்ச வேண்டாமா?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை