கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சங்கத்தமிழ் இலக்கியங்களின் தொகுப்புக்கு திராவிட களஞ்சியம் என பெயர் சூட்டுவதா? - சீமான் கண்டனம்

சங்கத் தமிழ் இலக்கியங்களை திராவிடக் களஞ்சியம் என தொகுக்கப்படும் என்கிற தமிழக அரசின் அறிவிப்புக்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், சங்கத்தமிழ் இலக்கியங்களை தொகுத்து அவற்றிற்கு திராவிடக் களஞ்சியம்' எனப்பெயர் சூட்டப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது.

தமிழர்களின் அறிவுக்கொடைகளாக இருக்கும் பழந்தமிழ் இலக்கியங்களை திராவிடக் களஞ்சியம் என அடையாளம் மாற்றம் செய்ய முயலும் திமுக அரசின் செயல் தமிழினத்திற்கு எதிரான மிகப் பெரும் மோசடித்தனமாகும். சங்க இலக்கியங்களிலோ, பழந்தமிழ் காப்பியங்களிலோ, தொன்ம இலக்கண இலக்கிய நூல்களிலோ எங்கும் குறிக்கப்பெறாத திராவிடம்' எனும் திரிபுவாத சொல்லை கொண்டு தமிழ் களஞ்சியங்களை குறிப்பிடுவது வெட்கக்கேடானது.

எனவே, சங்கத்தமிழ் இலக்கியங்களை திராவிடக் களஞ்சியம்' என அடையாளப்படுத்தும் போக்கை உடனடியாக கைவிட்டு, அவற்றை தமிழ்க் களஞ்சியம்' என்றே குறிப்பிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது