தமிழக செய்திகள்

காஞ்சீபுரத்தில் வீட்டுக்குள் ரத்தக்காயத்துடன் கொத்தனார் பிணம் கொலையா? போலீசார் விசாரணை

காஞ்சீபுரத்தில் வீட்டுக்குள் ரத்தக்காயத்துடன் கொத்தனார் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காஞ்சீபுரம் செவிலிமேடு பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 23). இவர் பிளஸ்-2 படித்துவிட்டு கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவரது தந்தை வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டார். தாய் பாஞ்சாலியுடன் வசித்து வந்தார்.

அடிக்கடி தாய்க்கும், மகனுக்கும் தகராறு ஏற்படுவதால் விஜய் தனியாக செவிலிமேடு பெட்ரோல் நிலையம் எதிரே தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தார்.

இந்த நிலையில் நீண்ட நேரம் ஆகியும் மகன் வராததால் அவர் தங்கி உள்ள வீட்டுக்கு சென்று பார்த்து வரலாம் என்று அவருடைய தாய் பாஞ்சாலி நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது அவர் ரத்தக்காயத்துடன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.

அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து போலீஸ்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காஞ்சீபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்