தமிழக செய்திகள்

இஸ்ரோ விலை குறைந்த 3 வென்டிலேட்டர்கள் - ஆக்சிஜன் செறிவுகளை உருவாக்கி உள்ளது

இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம் விலை குறைந்த 3 வென்டிலேட்டர்கள் - ஆக்சிஜன் செறிவுகளை உருவாக்கி உள்ளது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்

கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், பல மாநிலங்களில் வென்டிலேட்டர், ஆக்சிஜன் செறிவூட்டிகளின் தேவை அதிகரித்து வருகிறது. இவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் இஸ்ரோ நிறுவனம் குறைந்த செலவில் 3 வகை வென்டிலேட்டர்களை வடிவமைத்துள்ளது. இதேபோல குறைந்தவிலை ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் தயாரித்துள்ளது.

இதுகுறித்து திருவனந்தபுரத்தில் செயல்படும் இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குனர் சோம்நாத் கூறியதாவது:

ஒரு வென்டிலேட்டர் தற்போது ரூ.5 லட்சத்துக்கு விற்கப்படுகிறது. நாங்கள் பிராணா, வாயு, ஸ்வாஸ்தா ஆகிய 3 வகையான வென்டிலேட்டர்களை வடிவமைத்துள்ளோம். இவை சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டிருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த வென்டிலேட்டரை ஒரு லட்சம் ரூபாயில் வாங்க முடியும்.

வென்டிலேட்டர் தவிர குறைந்த விலை ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் வடிவமைத்துள்ளோம். அடுத்த ஒரு மாதத்துக்குள் வர்த்தகரீதியாக புதிய வென்டிலேட்டர், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உற்பத்தி துவங்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்