தமிழக செய்திகள்

“கடின உழைப்பு நிச்சயம் நம்மை அரியணை ஏற்றும்” இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேச்சு

‘கடின உழைப்பு நிச்சயம் நம்மை அரியணை ஏற்றும்’ என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை வாழ் குமரி மாவட்ட நல சங்கங்களின் சார்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராக பொறுப்பேற்று உள்ள கே.சிவனுக்கு பாராட்டு விழா, சென்னை அம்பத்தூரில் நடந்தது.

விழாவுக்கு கன்னியாகுமரி நண்பர்கள் நல சங்கத்தின் தலைவர் கே.தனிஸ்லாஸ் தலைமை தாங்கினார். குமரி நற்பணி மன்ற தலைவர் ஜி.கே.தாஸ், தென் மாவட்ட ரெயில் பயணிகள் சங்க பொதுச்செயலாளர் ஜே.சூசைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., தமிழன் டி.வி. மேலாண்மை இயக்குனர் கா.கலைக்கோட்டுதயம், முன்னாள் போலீஸ் டி.ஐ.ஜி. ஜான் நிக்கல்சன், பிரபல முக சீரமைப்பு நிபுணர் டாக்டர் எஸ்.எம்.பாலாஜி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கடின உழைப்பு

விழாவில் இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேசுகையில், ஏழை குடும்பத்தில் பிறந்து, அரசு பள்ளியில் படித்து இன்றைக்கு மகத்தான பதவியில் அமர்ந்திருக்கிறேன். இதற்கு என் பெற்றோரின் பாசமும், ஆசிரியர்கள் மற்றும் பெரியோரின் ஆசியும் காரணம். கடின உழைப்பு நம்மை நிச்சயம் அரியணை ஏற்றும், என்றார்.

விழாவில் கே.சிவனின் மனைவி மாலதி, மகன்கள் சித்தார்த், சுசாந்த், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ் நாடார், சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்