தமிழக செய்திகள்

ஆக்சிஜன் முககவசத்துக்கு 'டீ கப்பை' பயன்படுத்திய விவகாரம்: உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியில் மாணவனுக்கு ஆக்சிஜன் முககவசத்துக்கு 'டீ கப்பை' பயன்படுத்தியது பற்றி கேட்டறிந்தார்.

தினத்தந்தி

உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த மாணவனுக்கு ஆக்சிஜன் முககவசத்திற்கு பதிலாக காகித 'டீ கப்பை' பயன்படுத்தியது தொடர்பாக புகார் எழுந்தது.

இது சம்பந்தமாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து உடனடியாக மருத்துவ பணிகள் இயக்குனரிடம் இதுகுறித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அங்குள்ள வசதிகள் பற்றி டாக்டரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் சிகிச்சைக்கு வந்த மாணவனுக்கு ஆக்சிஜன் முககவசத்திற்கு பதிலாக காகித 'டீ கப்பை' பயன்படுத்தியது பற்றி கேட்டறிந்தார். மேலும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். கலெக்டருடன் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் கோபிநாத் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு