தமிழக செய்திகள்

தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ. வேலுவுக்கு சொந்தமான 18 இடங்களில் வருமான வரி துறை சோதனை

தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ. வேலுவுக்கு சொந்தமான 18 இடங்களில் 4 மணி நேரமாக வருமான வரி துறை சோதனை நடத்தியுள்ளது.

தினத்தந்தி

திருவண்ணாமலை,

தமிழக சட்டசபைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் 6ந்தேதி நடைபெறுகிறது. ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

234 தொகுதிகளிலும் மொத்தம் 3,998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்த வேட்பாளர்களில் 3,585 பேர் ஆண்கள், 411 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 2 பேரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த தேர்தலில் தேசிய காட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தி.மு.க. போட்டியிடுகிறது. 174 இடங்களில் போட்டியிடும் அக்கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

தி.மு.க. சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் அக்கட்சியின் எம்.எல்.ஏ. எ.வ. வேலு போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் திருவண்ணாமலையில் பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ. வேலுவுக்கு சொந்தமான இடங்களில் 4 மணி நேரமாக வருமான வரி துறை சோதனை நடத்தியுள்ளது.

சென்னை, திருவண்ணாமலை உட்பட 18 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளது. இதில், எ.வ. வேலுவின் இல்லம், பள்ளி, கல்லூரிகள், அறக்கட்டளை, நிதி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

திருவண்ணாமலையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், வருமான வரி துறையினர் சோதனை நடத்தியுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்