தமிழக செய்திகள்

பிளாஸ்டிக் பையில் மறைத்து வைத்ததால் குழந்தை இறந்த பரிதாபம்

பிளாஸ்டிக் பையில் மறைத்து வைத்ததால் குழந்தை பரிதாபமாக இறந்தது.

மானூர்:

நெல்லை அருகே மானூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது நிரம்பிய திருமணம் ஆகாத இளம்பெண்ணுக்கும், ஒரு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தால் அந்த பெண் கர்ப்பமானார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து அறிந்த அந்த பெண்ணின் பாட்டி, இந்த சம்பவம் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக ஒரு காலி பிளாஸ்டிக் பையில் குழந்தையை மறைத்து வைத்தார். இதனால் அந்த குழந்தை மூச்சுத்திணறி இறந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த மானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். குழந்தையின் உடலையும் கைப்பற்றி அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT