சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே தனியார் கல்லூரி பேருந்து சரக்கு ரயிலில் மோதி, 20 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் காயமடைந்த சம்பவம் அறிந்து மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன். கல்வி கற்கச் செல்லும் மாணவர்கள் இவ்வாறான விபத்தில் சிக்கியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது.
தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் கவனமாக இருந்திருந்தால் இத்தகைய விபத்து நடைபெற்றிருக்காது. இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்கள் அனைவரும் விரைவில் பூரண நலம்பெற விரும்புகிறேன். அவர்களுக்கு உடனடியாக சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இத்தகைய விபத்துகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க ரயில்வே கடப்புப் பாதைகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்புகளை வலுப்படுத்த ரயில்வே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.