தமிழக செய்திகள்

கொள்கை எதிரிகளை வீழ்த்த வேண்டிய கட்டாயம்: அமைச்சர் அன்பில் மகேஷ்

எங்கள் பலமே கூட்டணிதான் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

தினத்தந்தி

தஞ்சாவூர்,

தஞ்சாவூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் அனைவரும் ஒரே கூட்டணியாக பயணித்து வருகிறோம். எங்கள் பலமே கூட்டணிதான். கருத்துக்கள், கொள்கைகள் மாறுபட்டாலும் திமுக கூட்டணி பலமாக உள்ளது. ஒற்றுமை மற்றும் தோழமையுடன் இணைந்து கொள்கை எதிரிகளை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

எங்களின் வெற்றியை கூட்டணியின் பலத்திற்கான வெற்றியாக நாங்கள் பார்க்கிறோம். கூட்டணி தொடர்பாக விஜயிடம், ராகுல் காந்தி பேசியது தொடர்பாக அவர்களிடம் தான் கேட்க வேண்டும். மழை காலங்களில் பள்ளிகளில் தண்ணீர் தேங்கக்கூடாது; மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்