தமிழக செய்திகள்

ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்பட்டன எனக் கூறப்படுவது தவறானது -கார் ஓட்டுனர் அய்யப்பன் பேட்டி

ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்பட்டன எனக் கூறப்படுவது தவறானது என கார் ஓட்டுனர் அய்யப்பன் கூறி உள்ளார். #JayalalithaaDeath #InquiryCommission

சென்னை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷனில் விசாரணை நடந்து வருகிறது. முன்னாள் இந்நாள் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள், உதவியாளர்கள், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் என அவரின் மரணத்தில் தொடர்புடைய அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில் இவர்கள் அளித்த வாக்குமூலங்கள் அனைத்தும் பிரமாணப் பத்திரங்களாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு ஜெயலலிதாவின் கார் டிரைவராக பணியாற்றிய அய்யப்பன் இன்று ஆஜரானார். விசாரணை முடிந்து திரும்பிய அய்யப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

1991 முதல் ஜெயலலிதாவின் கார் டிரைவராக பணியாற்றி கொண்டிருந்தேன். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் நாளில் சிகிச்சை முடிந்து மருத்துவர்களுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தேன். 75 நாளும் மருத்துவமனையில் தான் இருந்தேன், ஆனால் 3 முறை தான் ஜெயலலிதாவை பார்த்தேன்.

ஜெயலலிதாவை சசிகலா நன்றாக கவனித்து கொண்டார். நவம்பர் 19-ம் தேதி வார்டுக்கு மாற்றும் போதும் ஜெயலலிதாவை சந்தித்தேன். ஜெயலலிதாவின் கால்கள் எதுவும் அகற்றப்படவில்லை என கூறினார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்