சென்னை,
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அமமுகவை இணைத்துதான் வெற்றிபெற வேண்டும் என்ற அவசியம் அதிமுகவுக்கு இல்லை. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திடிரென வந்து வேகமாக தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்றார்.
ஊழலின் ஒட்டு மொத்த உருவமாக இருப்பது திமுகதான். ஆனால், திமுக பற்றி ஒரு வார்த்தை கூட கமல்ஹாசன் பேசவில்லை. வாரிசு அரசியல் என்றாலே திமுக தான்.
இவ்வாறு அவர் கூறினார்.