இதன் ஒரு கட்டமாக வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோருக்கும் இ-பதிவு கட்டாயம் என அரசு அறிவித்தது.அதன்படி திருமணம், மருத்துவ அவசரம், முதியோர் பராமரிப்பு, இறப்பு மற்றும் இறப்பு சார்ந்த காரியங்களுக்காக இ-பதிவு மூலம் பொதுமக்கள் வெளியூர்களுக்கு சென்று வந்தனர். இந்தநிலையில் தற்போது இ-பதிவு நடைமுறைகளில் இருந்து திருமணம் எனும் காரணம் தவிர்க்கப்பட்டு இருக்கிறது.
இதன்மூலம் இ-பதிவு மூலமாக திருமணத்துக்கு செல்வதற்காக பொதுமக்கள் பதிவு செய்யமுடியாது. கடந்த ஆண்டில் இ-பதிவு நடைமுறையில் இருந்தபோது திருமணத்துக்கு செல்வதற்காக அனுமதி தரப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இ-பதிவு நடைமுறையில் இருந்து திருமணம் எனும் காரண குறிப்பு நீக்கப்பட்டு இருக்கிறது.