தமிழக செய்திகள்

கவர்னர் பயணத்தில் இடையூறு ஏற்படுத்தி இருந்தால் கண்டனத்துக்குரியது - கார்த்தி சிதம்பரம் எம்.பி

கவர்னர் பயணத்தில் இடையூறு ஏற்படுத்தி இருந்தால் கண்டனத்துக்குரியது என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி.கூறினார்.

சிவகங்கை,

கார்த்தி சிதம்பரம் எம்.பி. சிவகங்கையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினால் அது ஜனநாயக முறைப்படி இருக்க வேண்டும். ஆனால் அவரது பயணத்துக்கோ, பாதுகாப்புக்கோ இடையூறு வந்திருந்தால் அது கண்டனத்துக்குரியது.

இந்த சம்பவத்தை தமிழகத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வைத்து சட்டம்-ஒழுங்கு கெட்டுள்ளது என்று கூறியது ஏற்கத்தக்கதல்ல. தி.மு.க.- காங்கிரஸ் கட்சிக்கு இடையே உள்ள தேர்தல் உடன்பாட்டின்படி ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு தருவார்கள் என்று நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு