தமிழக செய்திகள்

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தினத்தந்தி

சென்னை

தென்மேற்குப் பருவ மழையால் ஜூன் முதல் செப்டம்பர் வரை பரவலாக மழை பெய்யும். இதனால் நாட்டுக்கு அதிகமான மழைப் பொழிவைக் கொடுக்கும் மழையாக இந்தப் பருவ மழை கருதப்படுகிறது.

தென்மேற்குப் பருவ மழை வாயிலாகத்தான் நாட்டிற்குத் தேவைப்படும் 75 சதவீத வருடாந்திர மழை ஜூன் முதல் செப்டம்பர் வரை கிடைக்கிறது.

கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ம்தேதி தொடங்கும். இந்த ஆண்டு கேரளாவின் தெற்குப் பகுதிகளில் நேற்று (ஜூன் 3) தென்மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளதாக தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையம் அறிவித்தது.

இந்த ஆண்டு இயல்பான மழைப்பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது;-

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்கள், மற்றும் புதுக்கோட்டை, சிவகங்கையில் கன முதல் மிக கன மழையும், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளையும் வட தமிழக உள் மாவட்டங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.

கேரளாவில் தொடங்கிய தென் மேற்கு பருவமழை, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் முன்னேறியுள்ளது எனவும், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னேறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை