ரெயில்வே மேம்பாலம் அமைக்க கையகப்படுத்திய நிலத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்த ஊராட்சி தலைவர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ரெயில்வே மேம்பாலம்
காட்பாடி-விழுப்புரம் ரெயில் பாதையையொட்டி கீழ்பள்ளிப்பட்டு, வல்லம், கண்ணமங்கலம், சந்தனகொட்டா பகுதிகள் உள்ளன. இந்த பாகுதியில் கண்ணமங்கலம் கூட்ரோடு அருகே வேலூர்-திருவண்ணாமலை பரிரதான சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது.இந்த சாலையானது தூத்துகச்குடி-மங்களூரு தேசிய நெடுஞ்சாலைத்துறையாக அறிவிக்கப்பட்டதையடுத்து ரெயில்வே கேட் அமைந்துள்ற இடத்தில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான வேலைகளை தேய நெடுஞ்லை துறையினர் தொடங்கி உள்ளனர்.
இதற்காக அந்த பகுதியில் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு குடியிருப்புகள் மற்றும் காலி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் நில உரிமையாளர்களுக்கு போதிய நஷ்டஈடு வழங்காமல் காலதாமதம் செய்ததாகவும், உடனடியாக நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணியம்பாடியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வேலூர் கோட்ட வருவாய் அலுவலர், அனைத்து நில உரிமையாளர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்திருந்தார். ஆனால் இன்னும் வழங்கப்படவில்லை.
ஆலோசனை கூட்டம்
இது குறித்து வல்லம் ஊராட்சி தலைவர் சி.சிவக்குமார் தலைமையில் நேற்று வல்லம் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கண்ணமங்கலம் பேரூராட்சி முன்னாள் தலைவர் கோவர்த்தனன், ஒன்றிய கவுன்சிலர் எழிலரசிஅருள் உள்பட அந்த பகுதியை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கையகப்படுத்தப்பட்டுள்ள நில உரிமையாளர்களுக்கு உரிய முறையில் நஷ்ட ஈடு வழங்காமல் பணிகள் தொடங்கியதை கண்டித்தும், உடனடியாக இழப்பீட்டு தொகையை வழங்கிவிட்டு பணிகளை தொடங்கக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவலு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உரிய முறையில் நஷ்ட ஈடு வழங்காமல் பணிகள் தொடங்கியதை கண்டிக்கிறோம் என குடியிருப்பு, நில உரிமையாளர்கள் தெரிவித்தனர்.