தமிழக செய்திகள்

மெர்சலில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்பது ஜனநாயகத்திற்கு முறைகேடான செயல் ஜெ.தீபா பேட்டி

மெர்சலில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்பது ஜனநாயகத்திற்கு முறைகேடான செயல் என ஜெ. தீபா கூறிஉள்ளார்.

தினத்தந்தி

வேலூர்,

நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் என்ற திரைப்படம், கடந்த 18ந் தேதி தீபாவளி பண்டிகை அன்று வெளியானது.

இந்த திரைப்படத்தில், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள சரக்கு மற்றும் சேவை (ஜி.எஸ்.டி.) வரிக்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றுள்ளன. இதற்கு மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்ததால், தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் அரசியல் களம் சூடு பிடித்தது. மெர்சலில் இடம்பெற்று உள்ள காட்சிகளை நீக்கவேண்டும் என்ற கோரிக்கையும் பாரதீய ஜனதா தரப்பில் வழுத்தது. மாறாக எதிர்க்கட்சிகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மெர்சல் காட்சியை நீக்க எதிர்ப்பு தெரிவித்தன.

பிரச்சனை தொடர்ந்து நீடித்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் மெர்சல் பட விவகாரம் சுமுகமாக முடிவுக்கு வந்தது விட்டது என குறிப்பிட்டார்.

வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெ. தீபா, மெர்சலில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்பது ஜனநாயகத்திற்கு முறைகேடான செயல் என்றும் கருத்து சுதந்திரத்தை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை