தமிழக செய்திகள்

புதிய துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் வெற்றி: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெகதீப் தன்கருக்கு எனது நல் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என தமிழக கவர்னர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்தியாவின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவி காலம் 10-ந் தேதி முடிகிறது. எனவே புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க. கட்சி வேட்பாளராக ஜெகதீப் தன்கரும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மார்கரெட் ஆல்வாவும் நிறுத்தப்பட்டனர்.

இந்தத் தேர்தலில் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து அவருக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து கூறியுள்ளார்.இதுபற்றி கவர்னர் ஆர்.என்.ரவி தனது டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியாவின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெகதீப் தன்கருக்கு எனது நல் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்