தமிழக செய்திகள்

பாம்பு கடித்து ஜல்லிக்கட்டு காளை சாவு

பாம்பு கடித்து ஜல்லிக்கட்டு காளை பரிதாபமாக இறந்தது.

ஆலங்குடி தாலுகாவுக்குட்பட்ட புதுக்கோட்டை விடுதி ஊராட்சியை சேர்ந்தவர் உஷா செல்வம். இவர் மாவட்ட கவுன்சிலராக உள்ளார். இவர் மருது என்ற ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வந்தார். இந்த காளை பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடியுள்ளது. இந்தநிலையில் நேற்று இரவு ஜல்லிக்கட்டு காளையை பாம்பு கடித்தது. இதில் அந்த காளை பரிதாபமாக இறந்தது. இதையடுத்து அந்த காளைக்கு கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.