தமிழக செய்திகள்

ஜம்மு காஷ்மீர் விவகாரம் : எதிர்ப்பு போராட்டங்கள் குறித்து கண்காணிக்க - தமிழக டிஜிபி உத்தரவு

ஜம்மு-காஷ்மீர் தொடர்பான விவகாரத்தில், தமிழகத்தில் நடைபெறும் எதிர்ப்பு போராட்டங்கள் குறித்து கண்காணிக்க தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

370 பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமை அந்தஸ்தை மத்திய அரசு இன்று ரத்து செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இரு யூனியன் பிரதேசமாக செயல்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.

இதனையடுத்து, ஜம்மு-காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கான தீர்மானம் நிறைவேறியது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் பதிவாகின.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் நடைபெறும் எதிர்ப்பு போராட்டங்கள் குறித்து கண்காணிக்க அனைத்து மாவட்ட காவல் துறைக்கும் தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...