கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ஜனவரி 24: தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,215 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 31,64,205 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 29,20,457 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 24,639 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 46 பேர் (அரசு மருத்துவமனை - 21, தனியார் மருத்துவமனை - 25) உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 37,264 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று மேலும் 6,296 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் சென்னையின் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 6,98,616 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கோவையில் 3,786 பேருக்கும், செங்கல்பட்டில் 1,742 பேருக்கும், திருப்பூரில் 1,504 பேருக்கும், கன்னியாகுமரியில் 1,236 பேருக்கும், ஈரோட்டில் 1,199 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 6,07,54,711 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,51,217 கொரோனா மாதிரிகள் பரிசேதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 2,06,484 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 18,46,198 பேர் ஆண்கள் (இன்று-17,471 பேர்), 13,17,969 பேர் பெண்கள் (இன்று-12,744 பேர்). தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 திருநங்கைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு