தென்காசி,
தென்காசி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக மல்லிகை பூவின் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகைப்பூ விலை இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.1500 அதிகரித்தது. இதன் மூலம் தற்போது மல்லைகை பூ விலை 4,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மல்லிகைப்பூ விலை உயர்வால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் தெரிவித்தபோது, தேவை அதிகம் உள்ளதாலும் நாளை சுப முகூர்த்த தினம் என்பதாலும் திடீர் விலை உயர்வுக்கு காரணம் என தகவல் தெரிவிக்கின்றனர்,