தமிழக செய்திகள்

ஈரோடு சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,600-க்கு விற்பனை

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூவின் விலை உயர்ந்து ஒரு கிலோ 1,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினத்தந்தி

ஈரோடு,

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், இறுதிகட்ட பண்டிகைக்கால விற்பனை தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பலசரக்கு கடைகள், பட்டாசு கடைகள், ஜவுளிக்கடைகள் மட்டுமல்லாது பூ மார்க்கெட்டுகளிலும் விற்பனை களைகட்டியுள்ளது.

அந்த வகையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மல்லிகைப்பூவின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ 900 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று அதன் விலை உயர்ந்து ஒரு கிலோ 1,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ளதால், பூக்களின் விலை உயர்ந்துள்ளதாகவும், அடுத்த 2 நாட்களில் மல்லிகை விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு