தமிழக செய்திகள்

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையில் மல்லிகைப்பூ விலை கிடுகிடு உயர்வு

மதுரை மல்லி நேற்று 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினத்தந்தி

மதுரை,

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் தென்மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் வரவழைக்கப்பட்டு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெங்கலை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லி கிலோ ரூ.3,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மதுரை மல்லி இன்று ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளது.

மல்லிகைப்பூ கிலோ 3,000 ரூபாய்க்கும், பிச்சி மற்றும் முல்லை பூக்கள் கிலோ 2,000 ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி கிலோ 2,000 ரூபாய்க்கும், சம்பங்கி மற்றும் செவ்வந்தி பூக்கள் கிலோ 250 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் கிலோ ரூ.300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி பூக்களின் விலை உயர்ந்த போதிலும் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் வாங்க மக்கள் குவிந்துள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து