தமிழக செய்திகள்

மல்லிகை கிலோ ரூ.300-க்கு விற்பனை

பூக்கள் விலை குறைந்ததால் மல்லிகை கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது.

புதுக்கோட்டை பூ மார்க்கெட்டிற்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் வரத்து காணப்படுகிறது. இதில் கடந்த சில மாதங்களாக பூக்களின் வரத்து குறைவால் விலை உயர்ந்து காணப்பட்டன. குறிப்பாக மல்லிகை கிலோ ரூ.600 முதல் ரூ.800 வரைக்கு விற்பனையானது. முகூர்த்த நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் இதன் விலை மேலும் அதிகரித்திருந்தது. இந்த நிலையில் விளைச்சல் அதிகரிப்பால் மல்லிகை பூ வரத்து அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கிலோ மல்லிகை ரூ.300-க்கு விற்பனையாகிறது. மேலும் இதன் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் சென்டி கிலோ ரூ.300-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், செவ்வரளி ரூ.100-க்கும், முல்லை ரூ.150-க்கும், ரோஜா ரூ.100-க்கும் விற்பனையானது. பூக்கள் விலை குறைந்தாலும் வியாபாரம் அதிகளவில் இல்லை என வியாபாரிகள் கூறினர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்