தமிழக செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை பெற்ற ஜெயக்குமாருக்கு உடல்நலம் பாதிப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை பெற்ற ஜெயக்குமாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

தினத்தந்தி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் உள்ளிட்டோர் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். இதில் வேலூர், சென்னை புழல் சிறையில் இருந்து விடுதலையான முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் கடந்தாண்டு நவம்பர் மாதம் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில் முகாமில் இருந்த ஜெயக்குமாருக்கு நேற்று காலை திடீரென கை வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக பலத்த பாதுகாப்புடன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்த பிறகு, அவர் மீண்டும் சிறப்பு முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து