தமிழக செய்திகள்

ஜெயலலிதா வீடியோவை ஒளிபரப்ப வேண்டாம் ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை ஒளிபரப்ப வேண்டாம் என ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்து உள்ளது.

சென்னை

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையின் போது எடுத்த வீடியோவை தினகரன் தரப்பு வெளியிட்டு உள்ளது.

முதல் - அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் டிசம்பர் மாதம் 5-ந்தேதி உயிரிழந்தார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. ஜெயலலிதா மரணம் அடைந்தபோது முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வெளியில் வந்ததும், இந்த பிரச்சினையை பூதாகரமாக கிளப்பினார்.

தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே தினகரன் தரப்பு ஜெயலலிதா கேட்டுக்கொண்டதன் பேரில் சிகிச்சைக்கான வீடியோ பதிவுகள் எடுக்கப்பட்டது. அந்த வீடியோ பதிவு என்னிடம் உள்ளது. அதை அவசையம் வரும் போது வெளியிடுவோம் என கூறி இருந்தது.

இந்த நிலையில் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையின் போது எடுத்த வீடியோவை இன்று தினகரன் தரப்பு வெளியிட்டு உள்ளது. அதில் ஜெயலலிதா பழசாறு அருந்துவது போல் உள்ளது.

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார்.

தற்போது இந்த வீடியோ குறித்த பலவேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறும் நேரத்தில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ வெளியிட்டது விதிமீறல் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறியதாவது;-

ஜெயலலிதா வீடியோ தொடர்பாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த வீடியோவை வெளியிட்டது தேர்தல் விதிமீறல் ஆகும்.

ஜெயலலிதா சிகிச்சை குறித்த வீடியோ தொடர்பாக தற்போது வரை எந்த புகாரும் வரவில்லை.*தலைமை தேர்தல் ஆணையத்தின் தமிழக பிரிவு அதிகாரி தந்தி டிவிக்கு பேட்டி அளித்தார்.

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீண்நாயர் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஆர்.கே. நகர் தேர்தலை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கும் என்பதால் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஊடகங்கள் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைபெறும் வீடியோவை தொடர்ந்து ஒளிபரப்பகூடாது என தேர்தல் அதிகாரி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு