தமிழக செய்திகள்

மக்களின் வரிப்பணத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவு இல்லமா? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

‘மக்களின் வரிப்பணத்தில் போயஸ் கார்டன் வீட்டை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன?’ என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான ரூ.913 கோடி மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்க ஒரு நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று புகழேந்தி என்பவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, வருமான வரித்துறை ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், செல்வ வரி, வருமான வரி பாக்கிக்காக ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் வீடு, ஐதராபாத் பங்களா உள்ளிட்ட சில சொத்துகளை முடக்கியுள்ளதாக கூறியிருந்தது.