தமிழக செய்திகள்

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியான வழக்கில் வெற்றிவேல் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வழக்கில் டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் முன்ஜாமீன் மனுவை சென்னை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

தினத்தந்தி

சென்னை,

ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போல் இருந்த வீடியோவை, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கடந்த 20ந் தேதி வெளியிட்டார். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி கொடுத்த புகார் அடிப்படையில், புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஜெயலலிதா மருத்துவ சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது அண்ணாசதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் சார்பில் கொடுத்த புகார் மனு மீது போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வெற்றிவேல் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அவருடைய முன்ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்