சங்கராபுரம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள தொழுவந்தாங்கல் கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அருகில், ஒரு வாரத்திற்கு முன்பு, ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டது. அந்த சிலையை போலீசார் இரவோடு இரவாக அகற்றினர். அப்போது அங்கு திரண்ட அதிமுகவினர், சிலையை அகற்றக்கூடாது எனக் கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.