தமிழக செய்திகள்

ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது தேர்தல் அதிகாரி போலீஸ் நிலையத்தில் புகார்

ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது தேர்தல் அதிகாரி புதுவண்ணாரபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார்.

தற்போது இந்த வீடியோ குறித்த பலவேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறும் நேரத்தில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ வெளியிட்டது விதிமீறல் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் புது வண்ணாரப் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இந்த வீடியோ வெளியிடப்பட்டு உள்ளதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த புகார் மனு தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி