தமிழக செய்திகள்

ஜெயலலிதா மரணம்: மனோஜ் பாண்டியன்,சமையலர் ராஜம்மாள் விசாரணை ஆணையம் சம்மன்

மனோஜ் பாண்டியன், ஜெயலலிதா சமையலர் ராஜம்மாள், ஓட்டுநர் ஐயப்பன் ஆகியோருக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. #Jayalalithaadeath #InquiryCommission

தினத்தந்தி

சென்னை

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

ஜெயலலிதாவிற்கு நெருக்கமானவர்கள், ஜெயலலிதாவுடன் வசித்தவர்கள், அவரது உதவியாளர்கள், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தியது. இன்று 3-வது முறையாக டாக்டர் பாலாஜி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்தார்.

முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், ஜெயலலிதா சமையல்காரர் ராஜம்மால், ஓட்டுநர் ஐயப்பன் ஆகியோருக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணையத்தில் ஆஜரான சசிகலாவின் உறவினர்களை தவிர பெரும்பாலோர் சசிகலா யாரென தெரியாது என்று பதிலளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்