தமிழக செய்திகள்

ஜெயலலிதாவின் கொள்கையின் அடிப்படையில் பழனிசாமி அரசு செயல்பட்டு வருகிறது -கவர்னர் உரை

செழிப்புமிக்க தமிழ்நாட்டை உருவாக்குவதே ஜெயலலிதாவின் கனவு; இந்த கொள்கையின் அடிப்படையில் முதலமைச்சர் பழனிசாமி அரசும் செயல்பட்டு வருகிறது கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்தினார். #TNAssembly | #BanwarilalPurohit

தினத்தந்தி

சென்னை

சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்தினார் அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

பேரவையில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் என தமிழில் கூறினார். கவர்னர் வருவாய் குறைந்த போதிலும் தமிழக அரசு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துகிறது. கடைசி மீனவரை மீட்கும்வரை மீட்ப் பணியை மத்திய அரசு தொடர்கிறது.

* ஜெயலலிதா வகுத்துத்தந்த பாதையில் தமிழக அரசு வழுவாது செயல்பட்டு வருகிறது.

* சட்டம், ஒழுங்கை பாதுகாக்க இந்த அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது

* ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தை பட்ஜெட்டில் அரசு அறிமுகப்படுத்தும்

* ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு தீவிரம்.

* பட்டா மாறுதல் உட்பட இணையதளம் வழியிலான அரசு பணிகள் மக்களுக்கு பயனளிக்கிறது.

* கவர்னர் உரை முக்கிய அம்சங்கள் :சட்டம், ஒழுங்கை பாதுகாக்க இந்த அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது.

* ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது.

* 5 ஆண்டுகளில் 300 இ-சேவை மையங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

* கச்சத்தீவை மீட்க மத்திய அரசை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது; மீனவர் பிரச்சினை தீர கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வு.

* தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் ஓரளவு குறைந்துள்ளது.

* செழிப்புமிக்க தமிழ்நாட்டை உருவாக்குவதே ஜெயலலிதாவின் கனவு; இந்த கொள்கையின் அடிப்படையில் முதலமைச்சர் பழனிசாமி அரசும் செயல்பட்டு வருகிறது.

* மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும். இந்த திட்டத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி வழங்க உலகவங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

#TNGovernor | #TNAssembly | #BanwarilalPurohit

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு