தமிழக செய்திகள்

ஜெயலலிதாவின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு

விளம்பரங்களில் ஜெயலலிதாவின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடக்கோரி டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்தார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், சமூக சேவகர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதா குற்றவாளி என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்களில் ஜெயலலிதாவின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடக்கோரி டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக அரசின் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோர் 3 வாரத்துக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்