தமிழக செய்திகள்

பேரவையில் ஜெயலலிதா படதிறப்பு விழா: தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருக்கை அ.தி.மு.க. எம்.பி.க்களுக்கு ஒதுக்கீடு

சட்டப்பேரவையில் ஜெயலலிதா படதிறப்பு விழாவில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருக்கை அ.தி.மு.க. எம்.பி.க்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் படம் இன்று திறக்கப்படுகிறது. இதனை முதல் அமைச்சர் பழனிசாமி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் தி.மு.க.வினர் பங்கேற்க போவதில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் ஜெயலலிதா படதிறப்பு விழாவில் பங்கேற்கும் அ.தி.மு.க. எம்.பி.க்களுக்கு, தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள், அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை