தமிழக செய்திகள்

பெண்ணிடம் நகை பறிப்பு

செங்கோட்டையில் காற்றுக்காக கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிய பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

செங்கோட்டை:

செங்கோட்டை ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் பலவேசம் மனைவி மகேஸ்வரி (வயது 57). சம்பவத்தன்று அதிகாலை இவர் காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் மகேஸ்வரியின் கழுத்தில் கிடந்த தாலியை பிடித்து இழுக்கவே, அவர் சுதாரித்துக் கொண்டு தாலியை பிடித்தார். அப்போது மர்மநபர் மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்டு இருந்த 4 கிராம் தங்கத்தை மட்டும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை